Sunday, February 26, 2012

அறிஞர் அண்ணா


அண்ணா முதல்வராக இருக்கிறார். காங்கிரஸ் சார்பில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விநாயகம் 'உங்கள் ஆட்சியில் ஊழல் முறைகேடுகள் தலைதூக்குகின்றன’ என்று சொன்னார். 'அதை நிரூபித்தால், நான் உடனடியாக பதவி விலகத் தயார்’ என்று அண்ணா பகிரங்கமாக அறிவித்தார். உடனே, விநாயகம் பேசாமல் உட்கார்ந்து விட்டார். கூட்டம் முடிந்ததும் அண்ணாவைத் தனியாகச் சந்தித்த விநாயகம், யாருடைய துறையில் முறைகேடு நடந்தது என்பதைச் சொன்னதும் அண்ணா ஆடிப்போனார். அந்த அமைச்சர்கள் இருவரையும் உடனடியாக அழைத்தார்... கண்டித்தார்.

எதிரிகளே ஆண்டாலும் தவறு நடந்துவிடக் கூடாது என்று நினைக்கும் எதிர்க்கட்சித் தலைவரும்... தம்பிமார்களே அமைச்சர்களாக இருந்தாலும் தவறு செய்துவிடக் கூடாது என்று நினைக்கும் முதல்வரும் இருந்த காலம் அது. இன்று...

இராமானுஜன்


கணித மேதை இராமானுஜன், சிறு வயதில் ஒரு நாள், அவரது ஆசிரியர் வாழைப்பழங்களை வைத்து, வகுத்தல் பற்றி எளிய முறையில் விளக்கிக் கொண்டு இருந்தபோது, ‘‘யாருக்குமே ஒரு வாழைப்பழத்தையும் பிரித்துக் கொடுக்கவில்லை என்றால் என்ன ஆகும்?’’ என்றார்.  அதைக் கேட்டு, வகுப்பில் இருந்த மாணவர்கள் சிரித்துவிட்டனர். ஆனால், பிற்காலத்தில் ‘முடிவிலி’ எனப்படும் Infinity பற்றிய ஆராய்ச்சிக்கு இந்தக் கேள்வியே வித்தாக அமைந்தது.







நம்பிக்கை..!


ஒரு தாத்தாவுக்கு 100 ஆவது பிறந்தநாள்.
அவருடைய பேரப்பிள்ளைகள் எல்லாம் வந்து காலில் வீழ்ந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள். காலில் விழுந்து எழுந்ததும்,
"தாத்தா அடுத்த வருடமும் ஆண்டவன் புண்ணியத்தில் உங்கள் பிறந்தநாளில், உங்கள் ஆசீர்வாதம் பெறும் பாக்கியம் எங்களுக்குக் கிடைக்க வேண்டும்" என்று பணிவாகச் சொன்னார்கள்.
அதுக்கு அந்தத் தாத்தா என்ன சொன்னார் தெரியுமோ?
"கவலைப் படாதீங்கோ பிள்ளைகள் அது நிச்சயம் நடக்கும், ஏனென்றால் நீங்களெல்லாம் சின்னப் பிள்ளைகள்தானே! அதுக்குள்ளே உங்களுக்கு ஒண்ணும் ஆயிடாது" என்றார்.

ஜெட் விமானங்கள்

ஜெட் விமானங்கள் பறக்கும்போது, அதன் பின்புறத்தில் வெள்ளை நிறக் கோடுகளைப் பார்த்து இருப்பீர்கள். அதைப் புகை என்று நினைத்தால், அது தவறு.


ஜெட் எஞ்ஜின் உள்ளே எரிபொருள் எரியும்போது, அதில் அடங்கி இருக்கும் ஹைட்ரஜனும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனும் சேர்ந்து, நீராவியாக மாறுகிறது. நீராவி வெளியேற்றப்படுவதுதான் நமக்கு வெள்ளைப் பட்டையாகக் கோடு வடிவத்தில் தெரிகிறது. சில சமயம், இந்த நீராவி வெளியாகும் பகுதியில் காற்று ஈரப்பதத்துடன் இருந்தால், நீண்ட நேரத்திற்கு இந்தக் கோடு மறையாமலே இருக்கும். 



ஒட்டகத்தின் சந்தேகம்

தாய் ஒட்டகமும் குட்டி ஒட்டகமும் ஒரு மாலைப் பொழுதில் உலாத்திக் கொண்டிருந்தன. குட்டி ஒட்டகம் படு சுட்டி. சதா வாய் ஓயாமல் கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கும். அன்றைக்கும் அப்படித்தான். "அம்மா! நமக்கு மட்டும் முதுகில் திமில் இருக்கே. ஏனம்மா?"

தாய் எப்போதும் பொறுமையாக பதில் சொல்லும். "நாமெல்லாம் இயல்பாகப் பாலைவனத்தில் வாழ்பவர்கள் இல்லையா! பாலைவனத்தில் தண்ணீர் பாலைவனச் சோலைகளில் மட்டும்தான் கிடைக்கும். தினம் தினம் கிடைக்காது. கிடைக்கும் தண்ணீரை முடிந்த மட்டும் நம் உடம்பில் சேமித்து வைத்துக் கொண்டு வேண்டும் போது உபயோகப் படுத்திக் கொண்டால் தண்ணீர் கிடைக்காத பாலைவனத்தில் பல நாள் சுற்றித் திரியவே நமக்கு இயற்கை திமிலைக் கொடுத்திருக்கு" 

குட்டி திரும்பவும் கேட்டது. "அப்போ நமக்கு கண் இமை கெட்டியாக இருக்கே, மூக்கை மூடிக் கொள்ள மூடி இருக்கே? மத்த மிருகத்துக்கு அப்படி இல்லையே. அது ஏன்"

தாய் ஒட்டகம் வாயை அசை போட்டுக் கொண்டு சொன்னது. "பாலைவனத்தில் மணல் புயல் அடிக்கும், அப்போ சட்டுன்னு ஒதுங்க இடம் கிடைக்காது. கண்ணுக்கும் மூக்குக்கும் பாதுகாப்பா மூடி இல்லைன்னா கண்ணுலயும் மூக்குலையும் மணல் போயிடுமே. அதனால்தான் நமக்கெல்லாம் இப்படி மூடி இருக்கு"

குட்டி இப்போது அம்மாவின் கால் குளம்பைப் பார்த்துக் கேட்டது. "இவ்வளவு பெரிய குளம்பு நமக்கு எதுக்கு?"
"அது கண்ணு, மணல்ல நடக்கும் போது நம்ம கால் மணல்ல புதையாம நடக்கத்தான்". பொறுமையாக பதில் சொன்னது அம்மா ஒட்டகம். 

"பல்லும் நாக்கும் இவ்வளவு கெட்டியா, தடியா இருக்கே. அது ஏன்?". இது குட்டி யோசனையுடன் கேட்ட கேள்வி.
 அம்மா ஒட்டகம் சொன்னது. "பாலைவனத்தில் செடி கொடியெல்லாம் முரட்டுத்தனமாக இருக்கும். அதையெல்லாம் கடித்துச் சவைத்துத் தின்ன வேண்டாமா?" 


இப்போது குட்டி பட்டென்று கேட்டது. "அம்மா! இதையெல்லாம் வைத்துக் கொண்டு லண்டன் குளிரிலே இந்த மிருகக் காட்சி சாலையிலே நாம ரெண்டு பேரும் என்ன செஞ்சுகிட்டு இருக்கோம்?"


வீரப் பலகாரம்!

ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பிறகு பாரதியாரிடம் சிலர், ‘‘தங்களுக்கு சாப்பிட என்ன வேண்டும்?’’ என்று கேட்டார்கள்.
உடனே பாரதியார், ‘‘எனக்கு வீரப் பலகாரம் வேண்டும்’’ என்றார்.
கேட்டவர்களுக்குப் புரியவில்லை ‘‘அது என்ன வீரப் பலகாரம்?’’ என்றார்கள்.
‘‘இது தெரியாதா... வாய்க்குள் போட்ட வுடன் பற்களுக்கு வீரமாக, கடக்கு முடக்கு என வேலை தருபவை வீரப் பலகாரங்கள். மற்றவை கோழைப் பலகாரங்கள்’’ என்றார் பாரதியார்.


Thursday, February 16, 2012

யுரேனியம் செறிவூட்டல் பணிகள்: காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பி ஈரான் அதிரடி

யுரேனியம் செறிவூட்டும் பணியில் தங்கள் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பி, உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது ஈரான்.


அமெரிக்கா உள்ள உலக நாடுகளின் எதிர்ப்புகளுக்கிடையே தலைநகர் டெஹ்ரான் அருகில், போர்டோ பகுதியில், பூமிக்கடியில் மிக மிக பாதுகாப்பான முறையில், அணுஆயுதங்கள் தயாரிக்க உதவும் யுரேனியம் செறிவூட்டும் பணியை ரகசியமான மலைப்பகுதியில், ஈரான் நடத்தி வந்தது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், யுரேனியம் செறிவூட்டும் பணியில் தங்கள் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும், செறிவூட்டுதலுக்கு பயன்படும் யுரேனிய பிளேட்டுகளை பொருத்தும் காட்சிகளையும் ஈரான் நாட்டின் தேசிய தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இப்பணிகளை அந்நாட்டின் அதிபர் அகமதின்ஜாட் பார்வையிட்டார். அவருடன் ஈரான் அணுவிஞ்ஞானிகள் உடன் இருந்தனர். ஈரானின் இந்த செயல் உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த அணு சக்தி திட்டத் துவக்க விழாவில் பேசிய அதிபர் அகமதி நிஜாத் கூறியதாவது: ஈரானின் அணு சக்தி திட்டம் ஆக்கப்பூர்வமானது. அணு சக்தி அறிவியல் யாருக்கும் சொந்தமானதல்ல. அதனால், ஈரானின் அணு சக்தி திட்டங்களை எதிர்ப்பதை நிறுத்துங்கள். ஒவ்வொரு அணு சக்தி திட்டத்தின் மீதும், அமெரிக்கா நெருக்கடி கொடுக்கிறது. பிற நாடுகள் அத்துறையில் முன்னேறுவதை, அமெரிக்கா விரும்பவில்லை.பத்தாயிரம் குண்டுகளை வைத்துள்ள அமெரிக்கா தான், குண்டுகளை எதிர்ப்பதாக கூறி வருகிறது. இந்த செறிவூட்டல் கருவியின் வடிவமைப்பை, சர்வதேச அணு சக்தி ஏஜென்சிக்கு அளிக்கவும் ஈரான் தயார்.இவ்வாறு நிஜாத் தெரிவித்தார்.

தனிமைப்படுத்துங்கள்: அமெரிக்கா ஆவேசம்: ஈரான் யுரேனியம் செறிவூட்டும் பணியை வெளிப்படையாக ஆரம்பித்திருப்பது அமெரிக்காவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும் என ஒபாமா நிர்வாகம் தெரிவித்துள்ளது.


பெட்ரோல் கட்: இதனிடையே மற்றொரு அதிர்ச்சியாக, 6 ஐரோப்பிய நாடுகளுக்கு பெட்ரோலிய சப்ளையை ஈரான் நிறுத்தியுள்ளது. ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதால், அந்நாட்டிலிருந்து பெட்ரோல் இறக்குமதியை நிறுத்தப்போவதாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் அறிவித்திருந்தன. இந்நிலையில், அதற்கு முன்பாகவே ஈரான் தனது பெட்ரோல் சப்ளையை நிறுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

படித்ததில் ரசித்தவை


யாருடன் வாழ முடியுமோ அவர்களை நேசிப்பதைவிட,
யார் இல்லாமல் வாழ முடியாதோ அவர்களை அதிகமாக நேசியுங்கள்
.


------------------------------------------------------------------------------------------------------

2 lines to live in dis stupid world:

"if u apply Ur rules on this world,
they kick u

but if u kick this world,
they automatically follow ur rules! hws u all my swt cute frenss.....

------------------------------------------------------------------------------------------------------


Only 2 People
You need in your life...

A cute lover who
promises not to break
...your heart...

&

A best friend to kick
them if they do break it...
J