Saturday, March 24, 2012

நட்பு


இட மாற்றத்தில் பல வீதி நீ
சென்றாலும் உன்
விதி முடியும் வரை உனக்காக
ஒருவன் வருவான்
அவனே உன் "உயிரான நண்பன்"!...

Thursday, March 15, 2012

ஒரு நிமிடம்..

ஒரு நிமிடத்தில்
உன்னைக் கடந்து போகிற பெண்ணைப் பார்க்க
தினமும் ஒரு மணி நேரம் காத்திருக்கிறாயே' என்று
கேட்ட என் நண்பனிடம் சொன்னேன்.....
'நீ கூடத்தான்
ஒரே ஒரு நாள் சம்பளம் வாங்குவதற்காக
ஒரு மாதம் முழுவதும் வேலை செய்கிறாய்' என்று
 




உணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா?


அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும் ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது. பசிக்கும் போது தான் சாப்பிட வேண்டும். மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது.  உணவில் சீரகம் சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது.  வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது. கடுகு, உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது.  இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம், தலை சுற்றல், வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை. உணவு உண்பதற்கு முன்பு கை, கால், வாய், போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும். உணவு உண்ணும் போது பேசக் கூடாது, படிக்கக் கூடாது, இடதுகையை கீழே ஊண்டக் கூடாது. டி.வி பார்க்கக்கூடாது.

வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது. காலணி அணிந்து கொண்டு உண்ணக் கூடாது. சூரிய உதயத்திலும், மறையும் பொழுதும் உண்ணக் கூடாது.  உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். இருட்டிலோ, நிழல்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது. சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிக் கூடாது. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது. சாப்பிடும்போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை ஒரே நேரத்தில் பல வித பழங்களைச் சாப்பிடக் கூடாது.

எள்ளில் தயாரித்த உணவை இரவில் உண்ணக் கூடாது. வெங்கலம், அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும். வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் நல்ல அழகு, அறிவு, மன ஒருமைப்பாடு, குடும்ப ஒற்றுமை கிடைக்கும். நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவு பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ஆகியவற்றை சேர்க்கக் கூடாது. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ, அப்பளமோ உப்போ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது. அதே போல முதலில் கீரையோ, வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர். 

Sunday, March 11, 2012

Attitude


Today’s meaningful thought !
Once a Bird asks a Bee-"After a long Hard Work, u make Honey.. But a man steals that from u. Don't u feel sad?"
Then Bee replyd-"Never.. Bcoz, Man can steal my honey but can never steal the "Art Of Making Honey' from me".
Have Faith in ur Skills.... 
JJJ

வெளிப் பூச்சிக்கள்!


காலை ஒன்பது மணிக்கே, வெயில் அனலாய் தகித்தது. முகுந்தன், துண்டால் முகத்தையும், வழுக்கைத் தலையையும் துடைத்துக் கொண்டார். ஆட்டோவில் அமர்ந்தபடி, கோவில் கோபுரம் தெரிகிறதா என்று, அவர் மனைவி வைதேகி பார்த்துக் கொண்டே வந்தார்.


மருமகள் பாமா, மூன்று வயதுப் பேரனை அணைத்துக் கொண்டு, அடக்கமாக அமர்ந்து கொண்டிருந்தாள். ஆட்டோ முக்கி, முணகி அந்தச் சிறுகுன்றில், ஒருவழியாக ஏறி நின்றது. உச்சியில் இருந்த கோவில் அருகில் செல்ல முடியாதபடி, ஏகப்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. ஊர் ஓரத்தில் இருந்த அந்தக் கோவிலின் கும்பாபிஷேகத்தை காண, கூட்டம் குழுமியிருந்தது.

இறங்கி பணத்தைக் கொடுத்தார் முகுந்தன். அந்த சின்ன ஊரிலும் இருந்த, அத்தனை கார்கள் மத்தியில், ஒரு ஆட்டோவில் வந்து இறங்கியது சங்கடமாகத்தான் இருந்தது. சுற்றும், முற்றும் பார்த்தார். அறிமுகமானவர்கள் எவரும் பார்த்த மாதிரி தெரியவில்லை. தகிப்பிலிருந்து தப்பிக்க, சின்ன மண்டபத்தில் சிலரும், மரங்களடியில் சிலரும் அமர்ந்திருந்தனர்.

கலச பூஜை பக்கம், ஒரே கூட்டம். நல்ல வேளையாக, ஒரு பந்தலும் போடப்பட்டிருந்தது. ஆண்கள் நிறைந்த பந்தல் பக்கம், முகுந்தன் ஒதுங்கினார். மனைவியும், மருமகளும், பெண்கள் கூட்டம் நோக்கிச் சென்றனர்.
பந்தலில் திடீரென, அறிமுகமான முகங்களும் தெரிந்தன. சுந்தரேசனும், குருமூர்த்தியும் தங்களிடையே பேசிக்கொண்டே, அவரைப் பார்த்து கையைக் காண்பித்தனர். பால்ய நண்பர்கள், ஒரே அலுவலகத்திலிருந்து கிட்டத்தட்ட ஒன்றாக ஓய்வும் பெற்றவர்கள். ஆனால், அப்போதைய நெருக்கம் இல்லாதது போல், முகுந்தனுக்கு மட்டும் ஒரு சங்கடம். ஒரு இடைவெளி, அவர் மனதிலேயே முளைத்திருந்தது.
"பெரியவன் கலிபோர்னியா வேலையை விட்டுட்டு, சிகாகோ போயிட்டான். ரொம்ப சவுகரியமா இருக்குன்னு போன் பண்ணினான். மருமகளுக்கும் அங்கேயே வேலை கிடைச்சாச்சாம். காரும் மாத்திட்டேன்னு சொன்னான்," என்று, குருமூர்த்தியிடம் தொடர்ந்து கொண்டிருந்தார் சுந்தரேசன்.
"சின்னவன் இன்னும் மிட்சுபிஷிலதான் இருக்கான். ஜப்பானை விட்டு, அவனுக்கும் அமெரிக்கா போகத்தான் ஆசை," என்ற, சுந்தரேசன் கொஞ்சம், சப்தமாகப் பேசுவதுபோல், முகுந்தனுக்கு தோன்றியது. இரு கைகளையும் ஊன்றிக் கொண்டு, நாற்காலி விளிம்பில்தான் அமர்ந்து கொண்டிருந்தார். செவி அவர்கள் பக்கம் திரும்பியிருக்க, பார்வையை எங்கெங்கோ படர விட்டுக் கொண்டிருந்தார்.
"இந்த வருஷம் கனடாவிலேயும் நல்ல குளிர்ன்னு, என் பையன் விவேக் சொன்னான். அதனாலதான் நாங்கள் போகல," என்று, அவர் மகன் பற்றி பெருமையுடன் விவரித்துக் கொண்டிருந்தார் குருமூர்த்தி.
"பொண்ணு, மாப்பிள்ளை சவுக்கியமா?"
அக்கறையுடன், குருமூர்த்தியை விசாரித்தார் சுந்தரேசன்.
"ஹூம்... இன்னும் ஹாங்காங் பேங்கிலதான், மாப்பிள்ளை வேலை செய்யறார். துபாயை விட்டுத்தான் வர மனசில்லை," இருவரும் மவுனமாக முகுந்தனைப் பார்த்தனர்.
"வெள்ளிக்கிழமை... பத்தரை மணி ராகு காலம் வரதுக்கு முன்னாலேயே அபிஷேகம் ஆயிடும் இல்லையா... புதுப்பிக்கற வேலையெல்லாம் எப்படி செஞ்சு முடிச்சிருக்காங் கன்னு, ஒரு நடை பார்த்துட்டு வர்றேன்." 
எழுந்தார் முகுந்தன்.
அங்கிருந்து கொஞ்சம் நகர்ந்தால், பரவாயில்லை என்று தோன்றியது. தாழ்வு மனப்பான்மை, அவரை சித்திரவதை செய்து கொண்டிருந்தது.
மண்டபத்தின் ஓரத்தில், மருமகள் பாமா அல்லாடிக் கொண்டிருந்தாள். தான் ஒரு நடை சுற்றி வந்த பின், அவர் மனைவி வைதேகி, பேரனை கையில் வாங்கிக்கொண்டு, மருமகள் பாமாவையும் போய்விட்டு வரச் சொன்ன அழகு, அன்று அவர் மனதைக் கவரவில்லை. பக்கத்தில், சுந்தரேசன் மனைவி மாதிரி இருந்தது.
"பாட்டி... பாட்டி..." என்று சொல்லிக் கொண்டே, அவர் பேரன், சுந்தரேசன் மனைவி மடியிலும் தாவிக் கொண்டிருந்தான். அத்தோடு நிற்காமல், உரிமையுடன் அவர் கூந்தலையும் பிடித்து இழுக்க முற்பட்டான்.
ஜரிகையுடன் பளபளத்துக் கொண்டிருந்த சுந்தரேசன் மனைவியின் பட்டுப்புடவை, கசங்கிக் கொண்டிருந்தது. பேரனை எடுத்துக்கொள்ள விரைந்தார் முகுந்தன்.
"அந்த மாதிரியெல்லாம் விஷமம் செய்யக் கூடாது." அதற்குள் வைதேகியும், தன் பங்கிற்குப் பேரனை செல்லமாக அதட்டி இழுத்துக் கொள்ள முற்பட்டார்.
"பரவாயில்லை இருக்கட்டும்... குழந்தைங்க செய்யற சேட்டையை பார்க்க கொடுத்து வைத்திருக்கணும்," என்ற, சுந்தரேசன் மனைவி, குழந்தையை அள்ளிக் கொண்டாள்.
"நான் அமெரிக்கா போயிருந்தப்ப, என்னோட பேரக் குழந்தைங்க என்னை, 'மதர் இன் லா'ன்னு கூப்பிட்டாங்க... இந்த குழந்தையாவது, ஆசையா பாட்டின்னு கூப்பிடறானே!"
சுந்தரேசன் மனைவியின் குரல், கம்மியது போல் தோன்றியது.
"நீங்க அப்பறம் பேரப் பிள்ளைங்களை பார்க்க போகலையா... கொஞ்சம் வளர்ந்தா, உறவு முறை புரியாமலா போயிடும்?" ஆறுதலாகப் பேச முயன்று கொண்டிருந்தாள் வைதேகி.
விரைந்து வந்த முகுந்தன், தள்ளி நின்று கொண்டார்.
"வீட்டுக்காரருக்கு நெஞ்சுவலி வந்தப்ப, அங்க போய் டெஸ்ட் பண்ணிக்கலாம்ன்னு தான் பார்த்தோம். இந்தியாவிலேயே வசதிகள் அதிகம்ன்னு பசங்க சொல்லிட்டாங்க... டாலர் சேத்து வைக்கணும்ன்னு நெனைக்கறாங்களோ என்னவோ," சுந்தரேசன் மனைவியின் குரலில் விரக்தி தென்பட்டது.
கேட்டும், கேட்காதது போல், மீண்டும் சென்று பந்தலில் அமர்ந்து கொண்டார் முகுந்தன்.
பத்தரை, நெருங்க நெருங்க, கூட்டம் அதிகரித்துக் கொண்டிருந்தது. ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு, கையில் ஒரு பிளாஸ்டிக் பையுடன், முகுந்தனின் பையன் கோபால், பந்தலை நோக்கி வருவது தெரிந்தது. முகுந்தன் புருவத்தை நெறித்தார்.
"எனக்கு பத்தரை மணிக்கு பேங்கில இருக்கணும் அப்பா... கஸ்டமர்கள் வர ஆரம்பிச்சிடுவாங்க... நீங்க போயிட்டு வாங்க..." என்று சொல்லியபடி, அவர்களை அனுப்பியவன் வந்தது, அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.
"ஒரு நடை வந்து பார்த்துட்டுப் போயிடு'ன்னு அவன் தாயார் சொன்னது, ஒருவேளை நினைவில் இருந்திருக்கலாம். எப்@பாது@ம எளிமையாக இருப்பவன், இன்று மிகவும் சாதாரணமாக இருப்பதுபோல், முகுந்தனுக்குத் தோன்றியது.
தள்ளி உட்கார்ந்து கொண்டு, கோபால் அமர்வதற்கும் வழி செய்தவர், சுந்தரேசனையும், குருமூர்த்தியையும் பார்த்து, ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்தார்.
குருமூர்த்தியையும், சுந்தரேசனையும் பார்த்து, கண்களாலேயே வந்தனம் தெரிவித்த கோபால், "அப்பா... நான் இங்க உட்கார வரலை... இந்தப் பையை உங்களிடம் தர வந்தேன்," என்று சொல்லியபடி, முகுந்தன் கையில், அந்த பிளாஸ்டிக் பையைத் திணித்தான்.
"குழந்தைக்குரிய பால் பாட்டில, மருமகள் மறந்து வைத்து விட்டு வந்தாளா..." என்ற குழப்பத்துடன், பையைத் திறந்தார். மினரல் வாட்டர் பாட்டில்கள், பிஸ்கட் பாக்கெட்டுகள், இரண்டு ஆரஞ்சுப் பழங்கள் என, கண்களில் தென்பட்டன.
"வெயில் அதிகமா இருந்ததுப்பா... இங்க சாப்பாட்டுக்கும் நேரமாகி விடும்... ஊருக்கு ஒதுக்குபுறமா இருக்கற, இந்தக் கோவில் பக்கம், என்ன கெடைக்கும்ன்னு தெரியல. அதனால தான், இதைக் குடுத்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன்..."
"உங்களோட எப்படியும், இரண்டு, மூணு பேர் தெரிஞ்சவங்க இருப்பாங்கன்னு தெரியும். அதனால, கொஞ்சம் தாராளமாக வாங்கி வந்திருக்கேன்... இரண்டு குடையும் வச்சிருக்கேன். உச்சி வெயில்ல, ஆட்டோ பிடிக்க கீழே போக வேண்டியிருக்கும் பாத்துக்கங்க!"
கோபால் கிளம்ப முற்பட்டான்.
"கலச அபிஷேகம் எப்படியும் சீக்கிரம் ஆகிவிடும். பார்த்துட்டு கிளம்பேன்," என்ற முகுந்தனுக்கு களிப்பில், பையனை உரிமையுடன் வற்புறுத்த உற்சாகம் பிறந்தது.
"கீழ இறங்கிப் போகும்போது, அடிவாரத்திலிருந்தே பார்க்கறேம்பா... ஆபிசுக்கு லேட்டாய் போகக் கூடாது," கோபால் விறுவிறென ஸ்கூட்டரை நோக்கி நடந்தான்.
இப்போது குருமூர்த்தியும். சுந்தரேசனும் கலச பூஜை காண, சற்று முன்பாகவே எழுந்து கொண்டிருந்தனர்.
சற்று நேரத்தில் எழுந்து, அவர்களுடன் சேர்ந்து கொண்ட முகுந்தனின் பார்வை மட்டும், கோபால் பக்கமே நிலைத்திருந்தது.
ஸ்கூட்டரை எடுக்கும் முன், கோபால் பார்வையும், முகுந்தன் பக்கம் திரும்பியது. "கலசத்தைப் பார்... கலசத்தைப் பார்..." என முகுந்தன் ஜாடை காட்டினார். தலையை ஆட்டிய அவனும், பிஸ்கெட் பழங்களைச் சாப்பிட்டு, தண்ணீர் குடிக்க, அவருக்கு சைகை காட்டினான். கும்பாபிஷேகம் முடிந்த கையோடு, உயரத்திலிருந்து குருக்கள் தெளித்த நீரைவிட, கோபால் சைகைகள், அவருக்கு அதிகம் குளிர்ச்சியைத் தந்து கொண்டிருந்தன. பெருமிதத்தில் மீண்டும், அவரிடம் புல்லரிப்பு!
பந்தலில் அவர்கள் மறுபடியும் சென்று அமர்ந்த போது, நாற்காலியில், நன்றாகத் தள்ளி உட்கார்ந்தார் முகுந்தன். சுந்தரேசனிடமும், குருமூர்த்தியிடமும், திடீரென ஒரு மவுனம் குடிகொண்டிருந்தது.
முகுந்தன் தொண்டையைக் கணைத்துக் கொண்டார். சுந்தரேசனிடமும், குருமூர்த்தியுடனும் இப்போது, ஏனோ பேச வேண்டும் போல் இருந்தது.

நன்றி: வாரமலர்   

இலவசங்களால் வந்த இழப்பு: உரத்த சிந்தனை: ச.சிங்கராயர்


நாடு சுதந்திரம் பெற்றபோது, நமது பொருளாதாரம் மிகவும் பலவீனமாக இருந்தது. இன்றைய தொழில் வளமும், கட்டமைப்பு வசதிகளும் அன்றில்லை; தொலைத் தொடர்பு வசதிகளோ, போக்குவரத்து வசதிகளோ பெருகியிருக்கவில்லை. பெரும்பாலான மக்கள், வயிற்றுப்பாட்டுக்கு வேளாண்மையை மட்டுமே நம்பியிருந்த காலமது. ஆனாலும், மக்களிடத்தே கடினமாய் உழைத்து உயர வேண்டும் என்ற எண்ணம் குடி கொண்டிருந்தது. கடன் வாங்கி வாழ்க்கை நடத்துவதை அவமானமாகக் கருதினர்.இந்தச் சூழலில் தான் தேசத்தின் வளர்ச்சியை மனதில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிமுகம் செய்யத் துவங்கின.

கடந்த, 1951ல் தோன்றிய கூட்டுறவு இயக்கம், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. விவசாயிகளுக்கு, சிறு சிறு விவசாய கடன்கள் கிடைக்கச் செய்வதற்கென்றே உருவான அமைப்பு இது. காலப்போக்கில் திசைமாறியதால், கூட்டுறவுத் தத்துவத்தைத் தொலைத்து, அரசியல் வசப்பட்டு, இன்று ஊழல் மலிந்த நிறுவனமாக செயலற்றுக் கிடக்கிறது.

ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம், 1980களில் கொண்டு வரப்பட்டு மிகப்பெரிய வறுமை ஒழிப்புத் திட்டமாகக் கருதப்பட்டது. ஏழை மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கென்றே இந்திய அரசு இத்திட்டத்தின் மூலம், 143 பில்லியன் ரூபாய்களை மானியமாக செலவிட்டது. (ஒரு பில்லியன் என்பது 100 கோடி.) இந்தியாவில் வாழும் ஏழைகளில் பெரும்பாலானோரை சென்றடைந்த முதல் மானியத் திட்டம் இது. ஏழை மக்களுக்கு வங்கிகளை அடையாளம் காட்டியதும் இந்த திட்டம் தான். அதுபோல் வாங்கிய கடனை திரும்ப கட்டாததால், வங்கிப் பக்கமே ஏழை மக்களை போக விடாமல் செய்ததும் இந்தத் திட்டம்தான். "அரசாங்கக் கடன்களை வாங்கினால் கட்டத் தேவையில்லை' என்ற தவறான உணர்வை மக்கள் மனதில் விதைத்ததும் இத்திட்டம் தான்.

அதற்குப் பிறகு புதிய அணுகுமுறையோடு, 1999ம் ஆண்டின் தொடக்கத்தில், புதிய வறுமை ஒழிப்புத் திட்டமாக, "சொர்ண ஜோதி கிராம சுவரோஜ்கார் யோஜனா' என்னும் மத்திய அரசின் மற்றுமொரு திட்டம் அறிமுகமானது. இத்திட்டமும் உரிய வகையில் ஏழைகளைச் சென்றடைய இயலாமல், மானியம் என்னும் மயக்கத்தில் மக்களை வீழ்த்தியது. பிறகு, 2005ம் ஆண்டிலிருந்து சோதனை முறையில் துவங்கப்பட்டு, தற்போது தேசமெங்கும் செயல்பாட்டிலிருந்து வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டமானது, மத்திய அரசின் நட்சத்திரத் திட்டமாக கருதப்படுகிறது. உழைக்கத் தெரிந்த அனைத்து கிராமவாசிகளுக்கும், ஆண்டிற்கு, 100 நாள் வேலையை உறுதி செய்வது, அவர்தம் உரிமையாகக் கருதப்பட்டது. உலகமே வியந்து பாராட்டிய இத்திட்டம், செயலாக்கம் பெறும்போது, மாநிலத்திற்கு மாநிலம் தரம் குன்றியும், சீர்கேடு நிறைந்தும், நோக்கத்தை விட்டுத் திசைமாறி பயணிக்கும் திட்டமாக மாறி வருகிறது. "வேலை செய்யாமல் கூலி பெறுவது மக்களின் உரிமை' என்ற மனோபாவத்தை மக்களிடையே விதைத்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு, ஆண்டிற்கு, 3,450 கோடி ரூபாய் வரை, மத்திய அரசு, கூலியாக வாரி இறைத்தும், அவற்றில், ஆயிரத்தில் ஒரு பங்கு அளவு கூட பயனுள்ள பணிகள் நடைபெறவில்லை. மாறாக, தளர்ந்த நடைபோட்டுக் கொண்டிருக்கும் விவசாயத் தொழிலை மேலும் பலவீனப்படுத்தியிருக்கிறது.

மத்திய அரசானது, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் தவிர, பிற வளர்ச்சித் திட்டங்களுக்கும் பெருவாரியான மானியங்கள் வழங்கி வருகிறது. அவற்றுள் ஆண்டிற்கு, 90 ஆயிரம் கோடி அளவிலான உர மானியம் குறிப்பிடத்தக்கது. மாநில அரசுகளும், தன் பங்கிற்கு மானியத் திட்டங்களையும், இலவசங்களையும் வாரியிறைத்துக் கொண்டிருக்கின்றன. இலவசத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதில், தமிழகம், இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது. உலக வங்கியில் கடன் பெற்று முன்பு வாழ்ந்து காட்டுவோம் என்றும், தற்போது, புதுவாழ்வுத் திட்டம் என்றும் அழைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வறுமை ஒழிப்புத் திட்டம் இவற்றுள் குறிப்பிடத்தக்கது. இதற்கென, 750 கோடி ரூபாய் வரை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த, ஐந்தாண்டுகளில், வீடு தவறாமல் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கி, அழகு பார்த்த வகையில், 4,500 கோடி ரூபாயை தமிழக அரசு செலவு செய்துள்ளது. தற்போது, தமிழக மக்களுக்கு, இலவசமாக அரிசி, கிரைண்டர், மிக்சி, மின் விசிறி வழங்கும் திட்டம், கறவை மாடுகள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் என, இலவசங்களை அள்ளி இறைத்திருக்கிறது தமிழக அரசு. இதற்கென, 8,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் நடைமுறையிலிருந்து வரும் மதிய உணவு திட்டத்திற்காக, ஆண்டிற்கு, 924 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்படுகிறது. கடந்த, 20 ஆண்டுகளாக, விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு கூட ஒரு விளக்குத் திட்டம் என்ற வகையில், 1.30 லட்சம் வீடுகளுக்கு, இலவசமாக மின்சாரம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஆண்டிற்கு, 4,800 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தை ஆண்ட, ஆண்டு கொண்டிருக்கிற கட்சிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லக்கூடிய தொலைநோக்குப் பார்வை இல்லாதது மிகுந்த வருத்தத்திற்குரியது. இலவசங்கள், மானியங்கள் மூலம் மக்களை மயக்கும் செயல்களில்தான் பெரிதும் கவனம் செலுத்துகின்றனர். இதுபோன்ற குறுகிய கால குறிக்கோளோடு செயல்படுத்தக் கூடிய இலவசத் திட்டங்களும், மானியத் திட்டங்களும் நமது சமூகத்தில் எதிர்மறையான தாக்கங்களைத் தான் உண்டு பண்ணி வருகின்றன. அரசிடமிருந்து அனைத்தும் இனாமாக கிடைக்கும் என்ற எண்ணம் மேலோங்கி, மக்களிடம், உழைக்கும் உந்துதல் குறைந்து வருகிறது. மானியங்களும், இலவசத் திட்டங்களும் வறிய நிலையில் உள்ள மக்களை மட்டும்தான் சென்றடைய வேண்டும் என்பது நியதி. ஆனால், அவ்வாறு அரசால் செயல்படுத்த இயலாமல், சகட்டுமேனிக்கு அனைவருக்கும் இலவசங்கள் வழங்கப்படுவதால், இதன் நோக்கம் அடிபட்டுப் போய் விடுகிறது. இலவசத் திட்டங்களை செயல்படுத்துவதில், வெளிப்படைத் தன்மையோ, நேர்மையான செயல்பாடுகளோ இன்றி, ஊழலும், முறைகேடுகளும் பல்கிப் பெருகியுள்ளன. இதன் விளைவாக, தரம் தொலைந்து போகிறது. அரசிடமிருந்து தரமான சேவையை பெறுவது அரிதாகிவிடும் நிலை உள்ளது.

இந்நிலை தொடருமானால், நாட்டின் ஆக்கப்பூர்வமான நீடித்த வளர்ச்சி என்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கும். இதை மக்களுக்கு புரிய வைத்து, இலவசங்களை தவிர்த்து, தொலைநோக்குத் திட்டங்களால் நாட்டை முன்னோக்கி இட்டுச் செல்லும் திராணி, நேர்மையான அரசியல் தலைவர்களிடத்தே கூட இல்லாமல் போய் விட்டது. தமிழகத்தில் உள்ள நதிகளையெல்லாம் இணைக்கும் அவசியம் ஏற்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இதற்காகும் பட்ஜெட், 40 ஆயிரம் கோடியாகலாம் என, நிபுணர்கள் கருதுகின்றனர். இவ்வளவு பெருந்தொகை நம்மால் திரட்டப்படுவது சாத்தியமே. இதன் வாயிலாக தமிழகத்தின் அடிப்படை வளம் உறுதி செய்யப்பட்டு விடும்; வாழ்வாதாரம் மேம்பாடு அடையும்; வறுமையும், பஞ்சமும் நம்மை நெருங்காது. நீர் வசதிகள் உறுதி செய்யப்பட்டு விட்டால், விவசாயிகளுக்கு எந்த மானியமும், இலவசங்களும் தேவையில்லையே.

சூரிய சக்தியை பெருவாரியாக பயன்படுத்தக் கூடிய தொழில்நுட்பத்தை கொண்டு வரமுடியும். இதற்கு செலவு செய்வது ஆக்கப்பூர்வமான மூலதனமே. இதன்மூலம் பூமியில் உள்ள இயற்கை வளத்தின் மீது கை வைக்காமல், நிலைத்த சக்தி வளத்தை எட்ட இயலும். மின் சக்தி போதிய அளவு கிடைக்கும்போது, நாட்டின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். இளைஞர்களின் சக்தியை சரியாக பயன்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒரு சிறப்பு தொழிற்கல்வி மையம் அல்லது சமூகக் கல்லூரிகள் அமைத்து, வீணாகிக் கொண்டிருக்கும் இளைஞர் சக்தியை சரியான திசையில் திருப்புவதன் மூலம், நமது மாநிலத்தில் மனிதவளம் மேம்படும். மேலும், நாட்டில் நிலைத்த வளர்ச்சியை உறுதி செய்யவும் முடியும். இருப்போர், இல்லாதோர் என சமூகத்தில் பலதரப்பட்ட பிரிவினர் உள்ளனர். இதில் அரசின் கடமை யாதெனில், மிகவும் வறியோர், ஆதரவற்றோர், பலவீனப்பட்ட பிரிவினர் என, மிக மிக தாழ்வு நிலையில் உள்ளவர்களை அடையாளம் கண்டு, அவர்களது முன்னேற்றத்திற்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும். இவர்களுக்கு மட்டும் அரசின் மானியங்கள், இலவசங்கள் கிடைக்கச் செய்வதில் தவறில்லை. மக்கள் அனைவரும் இலவச திட்டங்களை கொடுத்தால், வாங்கிக் கொள்கிறார்களே தவிர, எவரும், "எங்களுக்கு அத்திட்டங்களை கொடு' என்று கேட்பதில்லை. அரசியல்வாதிகள் தான் இதில் அதிக ஆர்வமும், அக்கறையும் காட்டுகின்றனர். இலவசம் எனும் இனிப்பினை தவிர்த்து, கசப்பான வேப்பெண்ணெய் மருந்தை நம் மக்களுக்கு வழங்கும் திட சிந்தனையுள்ள நல்ல தலைமை காலத்தின் கட்டாயம். நம் ஆட்சியாளர்கள், இலவச தத்துவத்தை மறந்து, நீண்டகால நிலைத்த வளர்ச்சியை கவனத்தில் கொண்டு செயல்பட்டால், நல்ல மாற்றத்திற்கான அடித்தளம் உடன் அமையும் என்பதில் எவருக்கும் ஐயமிருக்காது. இமெயில்: dhancoastal@dhan.org


நன்றி : தினமலர் 

Saturday, March 10, 2012

புதிதாக ஒருவன்!


விடிந்து கண் விழித்தபோது , "அப்பாடா..." என்று இருந்தது அருணுக்கு. இன்று வெள்ளிக்கிழமை. இந்த ஒரு நாளைக் கல்லூரியில் கழித்து விட்டால் போதும். முழுதாக இரண்டு நாட்கள் விடுமுறை.யப்பா, எவ்வளவு செய்யலாம் இந்த இரண்டு நாட்களில் முதலில், இப்படி காலை ஆறரை மணிக்கு எழுந்திருக்க வேண்டாம். அவசரக் குளியல் இல்லை. அப்பாவுக்கு பயந்து, இட்லிகளை விழுங்க வேண்டியதில்லை. கல்லூரி பஸ் பிடிக்க ஓட வேண்டாம். திறந்தவெளிச் சிறைச்சாலை போன்ற அந்த கட்டடங்களையும், மைதானத்தையும், வகுப்பறைகளையும் நினைத்தாலே, தண்ணீர் கூட இறங்குவதில்லை. "ம்... இன்னும் நான்கு வருடங்களை அந்த சிறைச்சாலையில் கழிக்க வேண்டும் என்று நினைக்கும்போது, தூக்கு போட்டு தொங்கலாம் போல இருக்கிறது..."என்று ஒரு முறை சொன்னான் கேசவன்.

"அருண்..." அப்பா அழைத்தார்.
படுக்கையை வேகவேகமாக சுருட்டினான். அதை விட வேகமாக, குளியலறைக்கு போய் முகம் கழுவினான். அம்மாவின் புடவைத் தலைப்பில் ஈரத்தைத் துடைத்துவிட்டு, விரல்களால் தலையைக் கோதிக் கொண்டு அப்பாவிடம் விரைந்தான்.
"சொல்லுங்கப்பா..." என்றான் அடங்கிய குரலில்.
"இன்னைக்குத்தானே?" என்றார் தினசரியை விரித்தவாறு.
"என்னதுப்பா?"
"என்னதுப்பாவா?" என்று தூசியை போலப் பார்த்தார். "முதல் டெஸ்ட்டுடா...இன்னைக்கு வருதில்ல மார்க்கு?"
"ஆ... ஆமாம்பா..." என்று எச்சில் விழுங்கினான். உள்ளே முதல் உதைப்பு ஆரம்பித்தது. "சே... இந்த பரிட்சைகளைக் கண்டுபிடித்தவன் எவன்?" என்று கோப அலை எழுந்து அடங்க, அவன் வேகமாக குரலில் பவ்யத்தை சேர்த்துக் கொண்டு சொன்னான்...
"இன்னைக்குத்தாம்பா..."
"நல்லது... நல்லா எழுதியிருக்கிறதா சொன்னே... எண்பது பர்சென்ட் வர வாய்ப்பு இருக்கா?"
"எண்பதா?" மறுபடி எச்சில் விழுங்க வேண்டியிருந்தது. "முதல் டெஸ்ட்டுப்பா... ஸ்கூல் மாதிரி இல்ல... பாக்கலாம்பா!"
"ஓகோ... பாக்கலாம்ன்னா சொன்னே... பெரிய சேர, சோழ, பாண்டிய வம்சம்ன்னு நெனப்பா உனக்கு... பாக்கலாம்ன்னு சொல்ற..., ஏண்டா?" என்றார் எரிச்சலுடன்.
"இல்லப்பா அப்பிடி இல்லப்பா..." என்றான் என்ன சொல்வதென்று தெரியாமல். "நல்லாத்தாம்பா எழுதியிருக்கேன்... ஆனா, எண்பது வருமான்னு தெரியலப்பா."
"அதெப்பிடி தெரியாம போகும்... எல்லா கேள்விக்கும் சரியா எழுதினா, அவங்க மார்க் போட்டுத்தானே ஆகணும்?" என்றவர், அவன் பதில் சொல்வதற்குள் பட்டென்று தினசரியை மூடிவிட்டு எழுந்தார்.
"டேய்... நல்லா மனசுல வெச்சுக்கோ... இந்த நாலு வருஷமும் உனக்கு அக்கினி பரிட்சை மாதிரி... நல்லபடியா தாண்டணும். இல்லேன்னா நெருப்புல விழுந்துடுவடா... புரிஞ்சுக்க... ஏய் கோமதி... தண்ணி எடுத்து வை குளிக்க... இன்னிக்கு பேக்டரில நெறைய வேலை இருக்கு... வெளிநாட்டுல இருந்து ஆளுங்க வர்றாங்களாம்..." நகர்ந்தார். அவன் பெருமூச்சு விட்டான்.
குளிக்கப் போய் விட்டார் என்று உறுதிப் படுத்திக் கொண்டு, அம்மாவிடம் போனான் பாய்ச்சலாக.
"என்னம்மா நெனச்சுகிட்டிருக்கார் உன் வீட்டுக்காரர்... எண்பது, தொண்ணூறுன்னு சர்வ சாதாரணமா பேசறாரு... இதென்ன, சரோஜினியம்மாள் உயர்நிலைப் பள்ளிக்கூடமா... சுண்டல் வினியோகம் மாதிரி, மார்க்குகளை அள்ளி வீசறதுக்கு... எல்லாம் பாத்துத்தான் பண்ணுவாங்க... அதுவும் முதல் டெஸ்ட்டு!"
அம்மா சுக்குக் காபியை ஆவி பறக்க அவன் கையில் கொடுத்துவிட்டு சொன்னாள்...
"சரிடா அருண்... ஆனா, ஒண்ணு மட்டும் நீ மனசுல வெச்சுக்கடா... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதையல்டா; அதை மட்டும் வீணாக்கவே கூடாதுடா... அப்பாவோட உழைப்புடா எல்லாம்... அதுலயும் மிஷின், டர்னிங், லேபர்ன்னு கடுமையான உடல் உழைப்பு. உன் பொறுப்பை உணர்ந்து நடக்கணும்பா அருண்."
"அட என்னம்மா நீ?" அவன் அலுப்புடன் டம்ளரை அம்மாவின் கையில் திணித்தான். "இது அனுபவிக்கிற வயசும்மா; கதாகாலட்சேபம் செய்யிற வயசில்ல. மிஞ்சி, மிஞ்சி போனா, என்னம்மா செய்துடப் போறோம்... புதுசா வர்ற சினிமா, வீக் எண்ட் பீச், ஓட்டல்... எப்பவாவது ஜீன்ஸ், ஷூஸ்... இதானேம்மா. என்ன தப்பு இருக்கு நீயே சொல்லு?"
"அனுபவிக்க வேண்டாம்ன்னு சொல்லலேப்பா அருண்... படிப்புலயும் கூடவே பெஸ்ட்டா இருக்கணும் இல்லயா?"
"அய்யோ அம்மா..."
"குளிச்சிட்டு வா... இட்லி, வெங்காய சட்டினி!"
"வேற என்ன இருக்கும், பர்கரா இல்ல தந்தூரியா?" கோபத்துடன் முணு முணுத்தபடி, அவன் துண்டை இழுத்தான்.
முதல் மூன்று வகுப்புகளை அருண், சுரேஷ், டில்லி, வசந்த் ஆகிய நான்கு பேரும் 'கட்' செய்து விட்டு எஸ்கேப்பானார்கள். 127 அவர்ஸ் சினிமா அட்டகாசமாக இருந்தது. அங்கேயே சைனீஸ் ரெஸ்டரென்ட்டில் அமெரிக்கன் சாப்சி சாப்பிட்டு விட்டு, கல்லூரிக்கு வந்தபோது, அவனுக்கு இதுவரை இருந்த சந்தோஷம் மறைந்து, இறுக்கமான மனநிலை ஏற்பட்டது. நண்பர்களைப் பார்த்தான். அவர்களும் சிரிப்பைத் தொலைத்திருந்தனர்.
"டின்னு கட்டிடுவான் என் அப்பன்," காதைக் கடித்தான் டில்லி.
"காலைல எந்திரிச்சதுமே ஆரம்பிச்சுட்டான்... இன்னைக்கு மார்க்கு வருதா, வருதான்னு... எஜுகேஷன் லோனுடா பையான்னு ஒரே புலம்பல்... சே... இந்த அப்பன்மார்களுக் கெல்லாம் ஒரு சட்டம் வரணும்டா... வயசுப் பையன்கிட்ட எப்படி பேசணும்ன்னு."
சுரேஷ் குரலும் இறங்கியது."எங்கப்பா வார்த்தைல காட்ட மாட்டார்... ஆனா, பெல்ட்டால விளாசிடுவார். நிஜமாவே பயமா இருக்குடா. ஹெச். ஓ. டி.,மேடம் ரஞ்சனி சொன்னபடி, இன்னைக்கு கொடுத்துடுவாங்கல்ல... மார்க் லிஸ்ட்ட?"
"ஆமாம்டா..." என்றபோது அருண் தொண்டை அடைத்துப் போயிருந்தது. "வெளியில தைரியமா இருக்கிற மாதிரி காட்டிக்கிறேனே தவிர, உள்ளுக்குள்ள உதறுதுடா... அப்பா ஒரே அட்வைஸ், அம்மா ஒரே சென்டிமென்ட்... சே!"
வகுப்பு இறுக்கமான அமைதியைத் தழுவிக் கொண்டது. எப்போதுமே மென்மையான அசைவுகளுடன் இருக்கும் போகன்வில்லா கூட, தன் இயக்கத்தை நிறுத்தி இருந்தது. வர்ணமயமான கனவுகளும், எண்ணங்களுமாக கூடி கும்மியடிக்கும் மாணவக் கூட்டம், இன்று படப்படப்பும் அமைதியின்மையுமாக பாறை போல உட்கார்ந்திருந்தது.
"குட் மார்னிங் பாய்ஸ்...." என்று பளீர்ப் புன்னகையும், வெளிர் பச்சை நிற கைத்தறிப் புடவையுமாக ரஞ்சனி மேடம் வந்தாள்.
"குட் மார்னிங் மேடம்..." பதில் வந்தது ரோபோக்களிடமிருந்து.
"நீங்கள் எல்லாரும், ஆவலுடன் எதிர்பார்க்கிற உங்கள் ஆன்சர் ஷீட் உங்கள் கையில்... மார்க் லிஸ்ட் ஆப் ஆல் த சப்ஜெக்ட்ஸ்... கீர்த்தி, கேன் யூ டிஸ்டிரிப்யூட் டூ ஆல்?" என்றாள் நிதானத்துடன்.
"யெஸ் மேடம்!" என்று எழுந்தாள் கீர்த்தி.
அருணுக்கு வெலவெலத்தது. கடைசியில் அந்த நேரம் வந்து விட்டது. தூக்கு மர நேரம். அவனுக்கு தெரியாதா பரிட்சை எழுதிய லட்சணம்? எல்லாமே தெரிந்து செய்வதுதான். தெர்மோ டைனமிக்சும், எலெக்ட்ரானிக்சும் நிச்சயமாக நல்ல சுவாரஸ்யமான சப்ஜெக்ட்ஸ்தான். ஏன் மைக்ரோ மேதமாடிக்ஸ் கூட சவாலும், சுவையும் நிறைந்ததுதான். கொழுப்பு... அது கொஞ்சம் அளவு கூடுதலாய் இருந்ததால் தான் எல்லா பிரச்னையும். தினம் ஜஸ்ட் ஒரே ஒரு மணி நேரம் புத்தகமும், கையுமாக இருந்தால் போதும்; இப்போது காலை ஆட்டிக் கொண்டு, மார்க் லிஸ்ட்டை வாங்கி, அப்பாவின் டேபிளில் எறிந்து விடலாம். ம்... எல்லாம் லேட்!
சிதறிய எண்ணங்களில் இருந்து தன்னை மீட்டுக் கொண்டு, மார்க் லிஸ்ட்டை பரிதாபமாக பார்த்தான்.
"என்ன... இது என்ன?" மறுபடி பார்த்தான். திகைத்தான்!
எல்லா பாடங்களிலும் எண்பது, எண்பத்தைந்து என்று எங்கோ விண்ணைத் தொட்டுக் கொண்டிருந்தன, மதிப்பெண்கள்!
திரும்பி மற்றவர்களைப் பார்த்த போது, அவர்களும் திகைப்பும், மகிழ்ச்சியுமாக திளைத்துக் கொண்டிருந்தனர்.
"யெஸ் டியர் ஸ்டூடண்ட்ஸ்..." அவர்களை இனிமையாகப் பார்த்தாள் ரஞ்சனி மேடம்.
"உங்க எல்லாருக்கும் ஆச்சரியமாக இருக்கும், எப்படி இவ்வளவு மார்க் வந்ததுன்னு... உண்மைதான். இது மிகைப்படுத்தினது... லீனியன்ட் வால்யூஷன்... உங்களோட உண்மையான திறமைக்கும், உழைப்புக்குமான மார்க் இல்லை... ஏன் தெரியுமா?"
"இது உங்களோட முதல் பரிட்சை... உங்களை விட, உங்க பேரண்ட்ஸ் ரொம்ப நெர்வசா இருப்பாங்க... முப்பது, நாப்பதுன்னு மார்க்கை பார்த்து, 'அப்செட்' ஆகி, உங்க மேல நம்பிக்கை இழப்பாங்க... எரிச்சல், கோபம், ஆத்திரம்ன்னு, எதிர்மறை எண்ணங்களால உங்க கல்லூரி வாழ்க்கையின் ஆரம்பமே கோணலாய்டும்."
"இப்ப நல்லா புரிஞ்சிருக்கும் எல்லாருக்கும்... இதெல்லாம் உங்க தகுதியை வளர்த்துக்கிட்டா கிடைக்கக் கூடிய மார்க்... உங்க உழைப்பும், இன்வால்வ்மென்ட்டும் அதிகரிச்சா கிடைக்கக் கூடிய மார்க்... ஹோப் எவ்ரிதிங் இஸ் கிளியர் நவ்... பீ ஹேப்பி டியர் பாய்ஸ்!"
அவன் விழிகளில் நீர் நிறைந்த அதே தருணத்தில், உள்ளுக்குள்ளே பொறுப்புணர்வும், இனிமையும், நன்றியும் நிறைந்த ஒரு புதிய மாணவன் உருவாகிக் கொண்டிருந்தான்.



நன்றி: வாரமலர்.

இனி செல்போனில் இலவச அறிவியல் பாடம்!

கிராமம் துவங்கி நகரம் வரை செல்போன் உபயோகிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி கொண்டே வருகிறது. இதை பயன்படுத்தி எளிய முறையில் அனைத்து மக்களுக்கும் அறிவியல் அறிவினை ஏற்படுத்த விக்யான் பிரச்சார் அமைப்பும், இந்திரா காந்தி திறந்த நிலை பல்கலைகழகமும் ஏற்பாடு செய்திருக்கிறது. அதன்படி அடிப்படை அறிவியல் பின்னணி இல்லாதவர்கள், அடிப்படை அறிவியல் பின்னணி பெற்றவர்கள், அறிவியல் பின்னணி கொண்டவர்கள் என்று 3 வகையாகப் பிரித்து, அவர்களுக்கு ஏற்ற அறிவியல் தகவல்கள், விஞ்ஞானிகள் பற்றிய விவரங்கள், ஆரோக்கிய ரகசியங்கள், அறிவியல் தொடர்பான உண்மைகளை என எல்லாமே செல்போன் மூலம் உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும். இந்த சேவையை உங்கள் செல்போனில் பெற 092230516161 என்ற எண்ணுக்கு 'SCIMBL' என்று தகவல் அனுப்பினால் போதும். முதலில் ஆங்கிலத்தில் வரத்துவங்கும் இந்த தகவல்கள், மாநில அமைப்புகளுடன் சேர்ந்து பின்னர் பிராந்திய மொழிகளிலும் தகவல்களை தர திட்டமிட்டுள்ளனர்.

Sunday, March 4, 2012

கொலை செய்தாலும் குற்றம் இல்லை! - சபாஷ் ஆஸ்ரா கர்க்

 



துரையை அடுத்துள்ள திருப்பாலையில் கடந்த 9-ம் தேதி மாலை ஒரு கொலை. வீரணன் என்பவரை அவரது மனைவி உஷாராணி, கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றுவிட்டார். இந்தக் கொலையில் மதுரை எஸ்.பி. எழுதிய தீர்ப்பு, இன்று தமிழகத்தையே திரும்பிப் பார்க்க​வைத்துள்ளது. வட்டித் தொழில் செய்துவந்த வீரண​னுக்கும் உஷாராணிக்கும் 22 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஏகப்பட்ட கனவு​களுடன் கணவன் வீட்டுக்குப்போன உஷா​ராணியிடம், முதல் இர​வன்றே கூடுதல் வரதட்சணை கேட்டு இருக்கிறார் வீரணன். அன்று தொ​டங்கிய நச்சரிப்பு அடுத்தடுத்து அடி, உதை என்று மாறியிருக்கிறது.

நான்கு பிள்ளைகள் பிறந்த பிறகும்கூட, குடித்துவிட்டு வருவதும், கொடுமைப்படுத்தி அடிப்பதையும் வீரணன் நிறுத்தவே இல்லை. ஒரு சமயம் உஷாராணியைக் கட்டிப்போட்டு, அரிவாளால் காலை வெட்டி, துடிப்பதைப் பார்த்து இன்பம் காணும் வக்கிர மன நிலைக்குப் போனார். பொறுக்க முடியாத உஷாராணி காவல் நிலையத்துக்குப் போனார். வீரணன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இன்றும் நடந்து​ வருகிறது. இதையடுத்து விவாகரத்தும் வாங்கினார்.

குழந்தைகளுடன் தனியே வாழ்ந்துவந்த உஷாராணிக்கு விவாகரத்து கிடைத்த பிறகும் நிம்மதி கிடைக்கவில்லை. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு முன் நின்று ரகளை செய்வார் வீரணன். இதுகுறித்து, போலீஸில் புகார் செய்தும், வீரணன் மாறவே இல்லை. இந்த நிலையில் திடீரென, 'நான் திருந்திவிட்டேன். சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன்’ என்று கடந்த நவம்பரில், வந்திருக்கிறார் வீரணன். முதலில் தயங்கினாலும்... குழந்தை​களுக்காக சேர்த்துக்கொண்டார் உஷாராணி. கொஞ்ச நாட்கள் அமைதியாக இருந்த வீரணன் மீண்டும் குடிக்கத் தொடங்கினார். மீண்டும் அடி... மீண்டும் கொடுமை என்று நரகமாகிப் போன நிலையில்தான், வீரணனைக் கொலை செய்துவிட்டார் உஷாராணி.

கொலை செய்ததை ஒப்புக்கொண்டதால், உஷாராணி கைது செய்யப்பட்டார். மறுநாள் உஷாராணியிடமும் கொலை நடந்தபோது வீட்டில் இருந்த அவரது இரண்டாவது மகள் கோகிலப்பிரியாவையும் தனியாக அழைத்து விசாரணை நடத்தினார் மதுரை எஸ்.பி-யான ஆஸ்ரா கர்க். இந்த சந்திப்புதான் அதிரடித் தீர்ப்புக்கு காரணமாக அமைந்துவிட்டது.

''வழக்கம் போல குடிபோதையில் தகராறு செஞ்ச மனுஷன், திடீர்னு வெறிபிடிச்ச மிருகமா மாறிட்டார். எதிர்ல நிக்கிறது தான் பெத்த மகள்னுகூட பாக்காம அவளைப் பலாத்காரம் பண்ண ஆரம்பிச்சிட்டார். எம் புள்ளயும் நானும் கையில கால்ல விழுந்து எம்புட்டோ கெஞ்சிப் பார்த்தோம்; கேக்கல. இதுக்கு மேலயும் தாமதிச்சா, புள்ளய நாசம் பண்ணினாலும் பண்ணிருவான்னு தோணுச்சு. பக்கத்துல கெடந்த கிரிக்கெட் மட்டையால மண்டையில ஓங்கி அடிச்சுட்​டேன். அந்தாளு செத்துப்போகணும்னு நெனச்சு நான் அடிக்கலை. ஆனா, அந்த நேரத்துல அதைத்தவிர எனக்கு வேற வழி தெரியலை சார்'' என்று எஸ்.பி-யிடம் கதறி இருக்கிறார் உஷாராணி. கோகிலப் பிரியாவும்  தன் தகப்பனின் அரக்கத்தனத்தை திக்கித்திக்கி விவரித்து இருக்கிறார். இருவரின் வாக்குமூலங்களிலும் கண்ணீரிலும் உண்மை இருப்பதை உணர்ந்த ஆஸ்ரா கர்க் சிந்தித்தார். பின்பு, ''இவங்க மேல எந்த வழக்கும் பதிவு செய்ய வேண்டாம்; வீட்டுக்கு அனுப்பிடுங்க'' என்று தடாலடியாய் சொல்லிவிட்டார். போலீஸ் அதிகாரிகள் தயங்கி நிற்க, எந்தச் சட்டத்தின் பிரகாரம் உஷாராணியை விடுதலை செய்கிறோம் என்பதைத் தெளிவாக விளக்கி வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார் ஆஸ்ரா கர்க்.

''உஷாராணியை வீரணன் பல வருடங்​களாகக் கொடுமைப்படுத்தியதற்கு சாட்சி​யங்கள் போலீஸிடமே இருக்கு. 'இனிமேல் அவர்களை தொந்தரவு செய்ய மாட்டேன்’ என போலீஸில் எழுதிக்கொடுத்த பிறகும் டார்ச்சர் கொடுத்து இருக்கிறார். அதன் உச்சமாக தனது மகளையே தகாத உறவுக்கு உட்படுத்த முயற்சித்திருக்கிறார். ஒரு தாயால் இதை எப்படி சகித்துக்கொள்ள முடியும்? அதனால், தற்காப்புக்காக கிரிக்கெட் மட்டையால் வீரணனின் மண்டையில் அடித்திருக்கிறார் உஷாராணி. அடி பலமாகப் பட்டதாலும் போதையில் இருந்ததாலும் சம்பவ இடத்திலேயே வீரணன் இறந்துவிட்டார். வழக்கமாக இதுபோன்ற வழக்குகளில் குற்றவாளியைக் கைது செய்து வழக்கை முடிப்போம். ஆனா, இந்தக் கொலையில் அப்படி நடப்பது சரியாக இருக்காது.

இந்திய தண்டனைச் சட்டம் 100 மற்றும் 120-ன் பிரகாரம், ஒரு பெண் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் போராட்டத்தில் கொலை செய்ய நேரிட்டால், அது தண்டனைக்கு உரிய குற்றம் இல்லை. இந்த பிரிவின்​படிதான் உஷாராணியை விடுதலை செய்கிறோம். இதுவரை யாரும் இந்தப் பிரிவைப் பயன்படுத்தி இருக்காங்களான்னு தெரியல. ஆனா, எனக்கு இதுதான் முதல் வழக்கு'' என்று கம்பீரமாகச் சொல்லி இருக்கிறார்.

உஷாராணியும் கோகிலப் பிரியாவும் பேசும் மன நிலையில் இல்லாததால் உஷாராணியின் மூத்த மகள் ராஜபிரியாவிடம் பேசினோம். ''நரக வேதனையை அனுபவிச்சுட்டோம் சார். பெத்த மகளையே தப்பா நெனைக்கிற அளவுக்குப் போயிட்டார்னா பாத்துக்குங்க. அம்மாவும் தங்கச்சியும் பித்துப்பிடிச்ச மாதிரி இருக்காங்க. எங்க மேல கருணை காட்டி அம்மாவை விடுதலை பண்ணாம இருந்திருந்தா, நாங்க நாலு பேரும் நடுத்தெருவுல நின்னுருப்போம். எங்களைத் தன்னோட பிள்ளைகளா நெனச்சுக் கருணை காட்டிய எஸ்.பி. சாரோட காலில் விழுந்து கதறணும் போலருக்கு'' என்று தழுதழுத்தார் ராஜபிரியா.
சட்டம் தன் கடமையைச் சரியாகவே செய்திருக்​கிறது.

ஆஸ்ரா கர்க் புகைப்படம்... 




நன்றி : ஜூனியர் விகடன் 

எது உண்மை..?

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளில் அமெரிக்க ராணுவப் படைகள்



வாஷிங்டன் : அமெரிக்க ராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவுகள், இந்தியா உள்ளிட்ட ஐந்து தெற்காசிய நாடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக, அந்நாட்டின் ராணுவ உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பசிபிக் பிரிவு ராணுவத்தின் தளபதி ராபர்ட் வில்லியம், நேற்று காங்கிரஸ் சபையில் பேசினார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர் ஜோ வில்சன், லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாத அமைப்பின் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு பசிபிக் பிரிவு ராணுவம் என்ன நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த கில்லார்டு கூறியதாவது:பசிபிக் பிரிவின் சிறப்புப் படைப் பிரிவுகள் தற்போது நேபாளம், வங்கதேசம், இலங்கை, மாலத் தீவு மற்றும் இந்தியாவில் நிறுத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் தெற்காசிய நாடுகளுடன் ராணுவ வலிமையை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.இந்தப் படைப்பிரிவுகள் குறிப்பாக, கடற்பகுதியில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.இவ்வாறு கில்லார்டு தெரிவித்தார்.

அமெரிக்கப் படைகள் விவகாரம் இலங்கையும் மறுப்பு
கொழும்பு : இந்தியா உள்ளிட்ட ஐந்து தெற்காசிய நாடுகளில், தங்கள் ராணுவ சிறப்புப் படைப் பிரிவுகள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்த கருத்துக்கு, இலங்கை மறுப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்க பசிபிக் பிரிவு ராணுவ தளபதி ராபர்ட் வில்லார்டு இரு நாட்களுக்கு முன் அமெரிக்க காங்கிரஸ் சபையில் பேசியபோது, இந்தியா, இலங்கை, நேபாளம், வங்கதேசம், மாலத்தீவு ஆகிய ஐந்து நாடுகளில் அமெரிக்க ராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவுகள் உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.இக்கருத்தை நேற்று முன்தினம் இந்தியா மறுத்தது. அப்படி ஒரு படைப் பிரிவு கடந்த ஆண்டுகளிலும், தற்போதும் இந்தியாவில் இருந்ததில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தது.

இதையடுத்து, நேற்று இலங்கை ராணுவச் செயலர் நிகல் ஹபுவராச்சி விடுத்த அறிக்கையில், "அமெரிக்கா அல்லது எந்த ஒரு வெளிநாட்டின் படைகளும் இலங்கையில் நிறுத்தி வைக்கப்படவில்லை. அதேநேரம், இலங்கையின் முப்படைகளின் சிறப்புப் படைகளுக்கு, நான்கு நாடுகளின், 68 வீரர்கள் அடங்கிய குழு ஒன்று செப்டம்பரில் பயிற்சி அளிக்க உள்ளது' என்றார்.

நன்றி :www.dinamalar.com

அமெரிக்க படைகள் இந்தியாவில் இல்லை என்ற மறுப்பு செய்தியை கவனிக்க தவறிவிட்டேன். யாரேனும் பார்த்திருந்தால் கருத்துக்கள் பகுதியில் பதிவு செய்யவும்...

Saturday, March 3, 2012

தேர்தல்...2016....2021...

வாக்காளர் (1): டேய் குப்பா இந்த தேர்தல்ல யாருக்கு ஓட்டு போட போற.
வாக்காளர் (2): டேய் சுப்பா எங்க வீட்டுக்கு வந்து 1000 ரூபாய் கொடுத்து கால்ல விழுந்து ஓட்டு கேட்டாரே அண்ணன் வணங்காமுடி அவருக்குதான் என் ஓட்டு.
காச வாங்கிட்டு துரோகம் பண்ண கூடாதுல...
வாக்காளர் (1): கூருகெட்ட குப்பா துரோகத்தபத்தி நீ பேசாத 1000 ரூபாய்க்காக உன் வாழ்கையில 5 வருஷத்த அடமானம் வக்கிறீயே...உங்க வணங்காமுடி 1000 ரூபாய குடுத்துட்டு கெரன்ட் கட், பால், பெட்ரோல், டீசல், பஸ் டிக்கெட்னு எல்லா விலையும் எத்திட்டு, லஞ்சம், ஊழல்னு சந்தோஷமா இருப்பாரு... நீ...
வாக்காளர் (2): ....? Cry



நன்றி : www.tamilnanbargal.com

அப்பா வருகிறார்


ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் தன் அம்மாவிடம் பதறி அடித்து கொண்டு ஓடுகிறான்,
"அம்மா... அம்மா.... அப்பா வந்திட்டு இருக்காரு, மொதல்ல ஒன்னோட காஸ்ட்லி புடவையை காட்டலாமா இல்ல என்னோட ப்ராகிரஸ் ரிபோர்ட் கார்ட் காட்டலாமா?"

நன்றி : www.tamilnanbargal.com

தோற்று விட்டாயடா நண்பா...


தமிழ் படித்தேன் என்கிறாய்..
இலக்கணமும் தெரியவில்லை
இலக்கியமும் தெரியவில்லை
பிழையின்றி எழுதவும் தெரியவில்லை.
தமிழன் என்று சொல்வதற்கு
உன்னிடம் என்ன அடையாளம்
இருக்கிறது நண்பா....?
தமிழால் பேசி விட்டால் நீ
தமிழனாகி விடுவாயா?
தமிழரல்லாத பல பேர் நம்
தமிழை வளர்க்கவில்லையா?
தமிழைப் பேசி தமிழைப் பாடி
தமிழாலே உயர்ந்தவர்
எத்தனை எத்தனையோ பேர்
உலகில் இருக்கும் போது
அரை குறையாய்த் தமிழ் படித்து
தமிழுக்குத் தலைவன் என்ற
பெயரைத் தேட முயல்கிறாயே!
காலத்தின் கோலத்தால் நான்
அரசின் படியில் மேலும் இல்லாமல்
கீழும் இல்லாமல் நடுநிலையில் நிற்கிறேன்
நீயோ எனக்கு மேலே தலைமை எனும்
மேடையில் நிற்கிறாய்.....
ஆனாலும் தோற்றுவிட்டவன் நானல்ல
நீயேதான். ஏன் தெரியுமா?
என் குழந்தைகளை நான் தமிழ்ப்
பள்ளிகளில் சேர்த்தேன்.
அவர்களும் தமிழை வளர்ப்பார்கள்
தமிழ் நன்னெறிகளைப் போற்றுவார்கள்
தமிழர்களாக உருவெடுப்பார்கள்
என்ற மன நிம்மதியோடு....
மிக்க மன மகிழ்ச்சியோடு.
ஆயிரம் கோடி கொடுத்தாலும்
வர மாட்டாத மன திருப்தி
எனக்குக் கிடைத்து விட்டது.
ஆனால் நீயோ உன் குழந்தைகளை
ஆங்கில மொழிப் பள்ளிகளிலும்
மலாய் மொழிப் பள்ளிகளிலும்
சேர்த்து விட்டாய்..........
தமிழ் சோறு போடுமா
என்றும் கேட்டாய்...
இனி ஒரு தமிழனை நீ உன்
சந்ததி மூலம் உருவாக்க முடியுமா?
முடியாது, கண்டிப்பாக முடியாது
தோற்று விட்டாயடா நண்பா....
தோற்றத்தில் தமிழனாக
இருந்தால் மட்டும் போதுமா?
தமிழன் என்ற உணர்வு எங்கே?
தமிழ் கொடுத்த வீரம் எங்கே?
தமிழ் வளர்த்த பண்பாடு எங்கே?
மறந்து விட்டாயே!
தாய் மொழியை மறந்தவன் தன்
தாயை மறந்தவனுக்கு ஒப்பாவான்
திருக்குறளை கொஞ்ச‌மும் அறியாதவனை
எப்படி ஒரு தமிழனென்று
நா கூசாமல் சொல்வது?
உன் மனதைத் தொட்டுப் பார்
உன்னையே நீ கேட்டுப் பார்
நீ பெற்ற பிள்ளைகளாயினும்
தமிழ் படிக்கும் உரிமையை
அவர்களிடமிருந்து பறித்து விட்டாயே..
நீ செய்தது நியாயம்தானா?
உண்மையில் ....
நீ ஒரு தமிழன்தானா?

நன்றி:www.tamilnanbargal.com

Height Of Diplomacy ♥

Husband Forgot His Wife's Birthday
And Later Telling her,

"How can I Remember your B'day Honey ..
When you Never Look a Year Older ?":O ;P