Saturday, October 20, 2012

பார்வை


எதிர் இருக்கைப் பயணி
சேகுவேரா பனியன் அணிந்து
சப்பாத்தி சாப்பிட்டு
கோக் குடித்தான்

ஆங்கிலத்தில் உரையாடி
அதிகாலை எழுப்பிவிடக்
கேட்டுக்கொண்டான்

பாதி உறக்கத்தில்
கண் விழித்த நான்
பத்திரமாக இருக்கிறதா
எனப் பார்த்துக்கொண்டேன்
என் சூட்கேஸையும்
எதிர் இருக்கைப் பயணியையும்

அவனது கண்களும்
பாதி திறந்திருந்தன
என் மீதும் - அவன்
சூட்கேஸ் மீதும்!

- பாப்பு
(விகடன் - 08.09.10)

1 comment:

  1. அருமை...

    (http://parithimuthurasan.blogspot.in/2012/11/naalai.html) மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Follower ஆகி விட்டேன்… தொடர்கிறேன்...

    நேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... என் தளம் வாங்க... நன்றி…

    ReplyDelete